ஜார்ஜ் புஸ்ஸும் வட்டபேரும் வாசிப்பு அனுபவம்
ஜார்ஜ் புஸ்ஸும் வட்டபேரும் வாசிப்பு அனுபவம்
ஜார்ஜ் புஷ் போன்றவர்களோடு நட்புக் கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அறிதானவர்கள்.
எதிர்பாராத கதை மாந்தர்களை, பார்க்காத கோணத்தில் காட்டும் உங்கள் சிந்தை வியக்க வைக்கிறது.
இக்கதையின் கடைசி வரியும், கதையின் தலைப்பும் உங்கள் ஆழத்தை உணர்த்துகிறது .
500 பக்க நாவல் தரும் உணர்வுகளை உங்கள் சிறுகதையில் கடத்துகிறீர்கள் சகோ .
பட்டப்பெயர்-ஆல் பல சச்சரவுகள் எங்கள் ஊரில் நடைபெற்றுள்ளது சகோ .அதை வைத்து முன்பு நான் ஒரு குறும்படம் இயக்கியுள்ளேன் ..https://youtu.be/-NYonOQOhqE?si=wd8RIHuwBO0vv54G நேரம் கிடைக்கும் பொழுது காணுங்கள் .
தான் தோன்றித்தனம் இல்லாத கட்டுரையை எழுத இயலவில்லை என்னால் மன்னித்து விடுங்கள் சகோ .
அந்த ஜார்ஜ்புஷ் நான்தான் சகோ , ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி செல்ல அழுதவன் நான் , ஒரு பாரக்ராப் படிக்க மூன்று மணிநேரம் போராடுபவன் ,தினமும் அழுபவன் பள்ளி நாட்களில் , அதிகமாக பேசாதவன் , வீட்டுப்பாடம் செய்தும் அடிவாங்குபவன் , நான் வாங்கிய அடிகளையும் வசைகளையும் தமிழகத்தில் எந்த மாணவனும் வாங்கியிருக்க மாட்டான் .மனநலம் பாதிப்புக்குளானவன் என நினைக்கப்படுகிறவன் , இன்று வரை என்னை சுற்றி இருப்பவர்கள் விநோதமானவனாகவே பார்க்கிறார்கள் , புஷ் க்கு வாய்த்தது போலவே எனக்கும் ஆறு நண்பர்கள் அமைந்தார்கள் , அவர்கள் இன்றுவரை என்னோடு பயணிப்பது என் பாக்கியம் , இந்த கதை எனக்கு அவர்கள் மீதான அன்பையும் தாண்டி ஒரு உணர்ச்சியை ஏற்பட வைத்தது , இப்போதுதான் புரிந்துகொள்கிறேன் , நன்றி சகோ . இக்கதையை அவர்களுக்கு பகிர்ந்துள்ளேன் .
(அஜிதன் அவர்களுக்கு எழுதிய கடிதம் )

Comments
Post a Comment