எஸ்.ரா-வின் எனது இந்தியா







 எஸ். ராமகிருஷ்ணன் தமிழில் மிக முக்கிய எழுத்தலார்களுள் ஒருவர்,.

இவர் எழுதிய " எனது இந்தியா " என்ற புத்தகம் படித்தால் போதும் இந்தியா பற்றி பல அறிய தகவல்களை தெரிந்து கொள்வதோடு நம்மை நாமே அறியலாம்,

அஞ்சு லட்ச ரூபாய்க்கு புத்தகம் வாங்கி தகவல்களை சேகரித்து வாரத்திற்கு 2000 ரூபாய் சன்மானதுக்கு எழுதிய நாவல், 600 பக்கங்களை கொண்ட இந்த நாவல் நமக்கு இந்தியாவின் பல ஆயிரம் ஆண்டு வரலாற்றையும் நம் பட்ட வலிகளையும் பல கோடி கொடுத்தாலும் கிடைக்காத கேள்விகளுக்கான பதில்களையும் தருகிறது,.


இந்தியாவில் இருந்து என்ன என்ன கொள்ளை அடிக்கப்பட்டது எப்படியெல்லாம் கொண்டு செல்லப்பட்டது நம் நாட்டின் கலைகளை (மருத்துவம், அறிவியல், வானசாஸ்திரம், தற்க்காப்புகலை, போர்க்கலை, மற்றும் பல ) என்பதை ஆதாரதோடு கண்டு வாசிக்கும் போது ரத்தகொதிப்பில் உடல் முடிகள் உதிர்கின்றன .


இப்போது நாம் இப்படி இருப்பதற்க்கு எத்தனை கோடி உயிர்கள் எப்படியெல்லாம் காவு வாங்கப்பட்டது என வாசிக்கும் போது இதயம் கணக்கிறது,.


கோவினூர் வைரம், அக்பர் பேரனின் மயிலாசனம், நேதாஜி யின் பயணங்கள், புத்தனின் ஈர்ப்பு, இமயமலை வரலாறு, இந்திய சாலைகளின் உதயம், ஐஸ் கட்டிகளின் கப்பல் பயணம், இந்தியாவில் உள்ள பல மதங்கள், மேலும் பல நூறு உண்மையான கதைகள் மட்டும் அன்றி பல இதயங்களின் இரணங்களையும் தவிப்பயும் துணிவையும் நமக்கு கடத்துகிறது,.

எனது இந்தியா நாவல் ஒரு பொக்கிஷம்

எஸ். ரா. நமக்கு கிடைத்த வரம்

எழுத்தின் மீது காதலா அல்லது வெறியா தெரியவில்லை 

சிந்தித்துப் பாருங்கள் 2000 ரூபாய் வருமானதுக்கு இவ்வளவு ஆராய்ச்சிகள் தேவையா? இவ்வளவு  உழைப்பு தேவையா?  கற்பனையாக எதையாவது எழுதி இருக்கலாமே அல்லது இந்த நாவலயே கூட மேலோட்டமாக எழுதி இருக்கலாமே ஏன் இவ்வளவு மேற்கோள் பல அறிய புகைப்படங்கள்,..எஸ். ரா. விற்கு இந்திய மக்கள் காலம் உள்ள வரை கடமை பட்டவர்கள்,

எஸ். ரா. விற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது,.

இப்போது சில ஆயிரம் பேர்கள் மட்டும் வாசித்து இருக்கலாம் எஸ். ரா - வை ஆனால் எதிர்கால மக்கள் இந்தியாவை பற்றிய உண்மையை மிக எளிதாக " எனது இந்தியா " மூலமாக அறிந்து அந்த படைப்பாளியை நினைத்து வியந்து புகழ் வணக்கம் செலுத்துவர்.


ஒரு வேளை நீங்களும் இப்போதே " எனது இந்தியா " நாவலை  வாசித்தால் இதுவரை நீங்கள் கேள்விப்படாத இந்திய வரலாற்றை அறிய முடியும் நீங்கள் நடக்கும் மண்ணின் மகத்துவத்தை உணர முடியும், பல ஆச்சரியமான உண்மைகள் தெரிய வரும் உங்களுக்கு,.

Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்