சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

 



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து ,


ஐயா என் பெயர் நந்தகுமார்



நான் ஒரு வாசகன் , பத்து வருடங்களாக புத்தகங்களை தொடர்ச்சியாக மிக மெதுவாக வாசித்தும் வாழ்ந்தும் வருகிறேன் .



நான் ஒரு  குறும்பட இயக்குனரும் கூட , 


DCE , BE(CIVIL) படித்துள்ளேன் .


தற்போது பலசரக்கு கடைகளுக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன் .



 வேள்பாரி நாவலை 11.04.2020 - அன்று வாசித்து மட்டுமே முடித்தேன் ஆனால் என்றும் என் சிந்தையில் பயணிக்கிறான் வேள்பாரி ,



நான் அதிகம் வேள்பாரி பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை அவன் எனக்குள்ளேயே இருக்கட்டும் ,


வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசத்தின் இறுதியில் பேயத்தேவரின் மரணம் என்னை இரண்டு நாட்களுக்கு மேல் அழுக வைத்தது ,அப்போது எனக்கு வயது 16 . 


அதன்பின் நான் வாசித்த எந்தப் புத்தகமும் என்னை அந்த அளவுக்கு அழ வைக்கவில்லை ,



4 ஆண்டுக்கு ஒருமுறை ஒளிவாள் இறங்கும் ஆதி மலையின் பெருங் கடவில் திசைவேழர் - க்கு சிலை வைத்ததை நினைத்து அழுதேன் ஏங்கி ஏங்கி இதயமும் துடிதுடித்தது , வேள்பாரி -யில் இறுதியில் வரும் அந்த ஒற்றை வரியில் , " அறங் காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும் எம் மக்களை ஆளட்டும் எம்மை ஆளட்டும் " . 

இப்பொழுது கூட கண்ணீர் வருகிறது ஏன் என்று புரியவில்லை .



நான் கேட்கும் கேள்வி உங்களை சங்கடப்படுத்தலாம் இருந்தும் கேட்கிறேன் உண்மையிலேயே வேள்பாரி நாவலை தாங்கள்தான் எழுதினீர்களா ? , 


என்னுடைய நாவல் எனக்கான நாவல் என்னுடையது என எண்ண வைக்கிறது . 


அந்தக் கேள்விதான் உங்களுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பாராட்டு என நினைக்கிறேன் .



மிக்க நன்றி ஐயா ,





3-10-2021 , அன்று அந்தக் கனமான புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது , " காவல் கோட்டம் " . 


28-10-2021 , இன்று 1162 ஆம் பக்கம் வரை வாசித்து மட்டுமே முடித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன் , 



எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா ? 


ஊர் முழுவதும் செய்தியை அறிவித்து விட்டு தேரின் நிழலில் நிற்கும் அறிவிப்பவன் போல் , உங்கள் நிழலை நாடுகிறேன் .



காவல்கோட்டம் நாவல் முழுவதுமே பெரியாத்தா சடைச்சி வடிவில் வெங்கடேசன் எனக்கு சொல்வதாகவே நினைக்கிறேன் . 


காவல் கோட்டம் பற்றி என் எண்ணம் உங்கள் வரியிலேயே கூறுகிறேன் , " சிந்தையில் அரும்பி எழுதாமலே கழுவேற்றத்தில் கருகி போயுள்ளது நிறைய சம்பவங்கள் " என நினைக்கிறேன்.

என் மனதின் எண்ணங்களை வார்த்தைகளால் எனக்கு எழுத தெரியவில்லை மன்னிக்கவும் ஐயா . நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு அதை எப்படி வெளிப்படுத்த என எனக்குத் தெரியவில்லை .



பறம்பு மலையையும் தாதனூரையும் என் சிந்தைக்கு தந்த உமக்கு நான் என்ன செய்ய ? 



 நன்றி

முகவரி


பொ.நந்தகுமார்,


1 / 183 கண்ணன் கோவில் தெரு,


V.புதூர் , கீழராஜகுலராமன் Post - 626136 , வெம்பக்கோட்டை தாலுகா, விருதுநகர் மாவட்டம் .

8680904854


Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்