கூகை நாவல் -வாசிப்பு அனுபவம்

 






கூகை நாவல் வாசிப்பு அனுபவம்


எழுத்தாளர்" சோ. தர்மன்" கரிசல் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர், 35 வருடங்களாக குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதி வருபவர்.

"சூழ் "நாவளுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் .


அரை நூற்றாண்டு வாழ்வியல், கோவில்பட்டி அருகில் உள்ள சிறிய கிராமத்தில் நடக்கும் அக்கிரமங்களும் ஆச்சரியங்களும்,

ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்,

"கூகை" ஒரு முக்கியமான படைப்பு 

பகலில் கண் தெரியாத கூகை யை அனைத்து பறவைகளும் பகலில் கொத்தி கத்தி விரட்டுவதும், ஒடுங்கி அடங்கி போய் ஒளிந்து வாழ்வதும், பொறுமையும் காத்திருத்தலும், கூகையோடு தொடர்பு படுத்தி அந்த மக்களை சொல்லாமல் சொல்லும் விதம் உயர்வானது.


ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பட்ட ஓநாய் குல சின்னம் (Wolf totem ) தமிழில் சி. மோகன் எழுதிய நாவல் நினைவுக்கு வருகிறது, ஓனாயோடு தெரிந்தேவும் அந்த மக்கள் வாழ்க்கை முறை ஒன்றி இருப்பது போல, கூகை பற்றி அறியாமலே இந்த மக்களின் வாழ்க்கை முறை கூகை போலவே உள்ளது வியக்க வைக்கிறது ,..


பகலில் ஒடுங்கி போகும் கூகை, இரவில் ராஜாலி கழுகு போல சுற்றி வேட்டை ஆடி மற்ற உயிரிணங்களை பயம் கொள்ள செய்கிறது,.இதே போல அந்த மக்களுக்கும் காலம் வருவதையும் அதை அவர்கள் பயன்படுத்துவதும் சுவாரசியமாக சொல்ல பட்டுள்ளது.


எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவளுக்கு (வெற்றிமாறனின் அசுரன் படத்திற்கு ) 100 மடங்கு இணையான நாவல் கூகை.


கிறிஸ்தவ மதம் மாற்றம் எவ்வாறு மக்களிடையே ஆர்வத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது என்பதை சிறிது ஜோ. டி. குரூஸ் எழுதிய " ஆழி சூழ் உலகு " நாவலில் மீனவ மக்களின் மனதை எழுதியது போல், மதம் மாற்றம் மூலம் தாழ்த்த பட்ட மக்களுக்கு ஏற்பட்ட பயன்களையும் துன்பங்களையும் சோ. தர்மன் காட்டுகிறார்.


சோ.தர்மன் க்கு முழுக்க முழுக்க கற்பனையான, அனைவரையும் அதிசயத்தில் ஆழத்த கூடிய வேறு மாதிரி ஒரு நாவலை எழுதும் ஆற்றல் உள்ளது என்பதை கூகை நாவலில் இடையில் வரும்ஒரு 10 பக்கம் காட்டுகிறது,

நாம் வாழும் இந்த நாட்டில் இப்படி ஒரு ஜாதிய முறை இப்படி ஒரு அடிமை முறை இருந்ததையும் இன்னும் இருப்பதையும் நினைத்து வெக்கி தலை குனிகிறேன்,.

கூகை நாவல் வாசிப்பவர்களின் உள்ளத்தையும் வாழ்க்கையையும் செறிவு படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.



Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்