பட்டாம்பூச்சி - வாசிப்பு அனுபவம்






மாபெரும் மானிட சாசனம்


இருண்ட உலகத்தில் அந்தப் ஃபிரெஞ்சுக் காரனுக்கு இடப்பட்ட பெயர்: பட்டாம்பூச்சி. (இயற்பெயர் ஹென்றி ஷாரியர்)


1931-ஆம் ஆண்டு, கொலையொன்றைச் செய்ததாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் முழுவதும் தீவாந்தரச் சிறையில் கழிக்க வேண்டும். என்று தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யவில்லை என்பது அவன் கட்சி.


பதின்மூன்றாண்டுக் காலத்துக்கு, சிறை சிறையாக அவன் தப்பிக் கொண்டேயிருந்தான். ஓட்டைப் படகுகளிலும், கட்டுமரங்களிலும், புதை மணல் களிலும், இருண்ட அடவிகளிலும், சிவப்பு இந்தியர்களிடமும், தன்னைவிட முரடர்களான கைதிகளிடமும் அவன் திரும்பத் திரும்பத் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்துப் போராடினான். மீண்டும் மீண்டும் அவனைச் சிறை பிடித்தார்கள். இறுதியில் பிரமிக்கத்தக்க ஒரு கடைசி முயற்சி செய்து வெற்றியும் பெற்றான்.


அறுபத்தாறு வயதான போது பட்டாம்பூச்சி அந்தப் பழைய நாட்களைப் பற்றி எழுதிய புத்தகம்தான் இது.


ஒரு ‘கொலைகாரன்' எழுதிய புத்தகமானாலும், மனிதனின் தணிக்க முடியாத சுதந்திர உணர்வையும், துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் மனத் திண்மையை யும் தைரியத்தையும் எடுத்துக்காட்டுகின்ற மாபெரும் மானிட சாசனம் .


                           24-05-2022 அன்று வாசிக்க ஆரம்பித்த புத்தகம் 28-06-2022 -ல் நிறைவு பெற்றது . 860 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஒரு கைதியின் 15 வருட நம்பமுடியாத கிரகிக்க முடியாத அனுபவங்களை நமக்குத் தருகிறது .


                          இந்தப் புத்தகம் என்னை மனப்பிறழ்வு கொண்டவனாக மாற்றியது , ஒவ்வொரு காட்சியிலும் மனம் நடுங்குகிறது .ஒரு மனிதன் எவ்வளவுதான் தாங்குவது,ஒருவேளை நான் இந்த பட்டாம்பூச்சியின் (ஹென்றி ஹாரியர் )இடத்தில் இருந்திருந்தால் தற்கொலை செய்துகொண்டு இருப்பேனோ என்னவோ .


        இதுவரை அனுபவிக்காத பல புதிய அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் பெற்றேன் .

 நரமாமிசம் சாப்பிடும் கைதிகளோடு பயணம் ,

 துணிவை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு கடலில் தொலைதூர பலநேர பயணங்கள் ஓட்டை படகுகளோடும் என்னைப்பீப்பாய்களிலும் , 

இரும்பு துருப்பிடித்து அழிவது போல , ஒரு தீவில் மனிதர்கள் நோயினால் தேய்ந்து தேய்ந்து அழிகின்றனர் . 

கடல் வாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியலை இதில் போல் எந்த புத்தகத்திலும் வாசித்து அனுபவித்தது இல்லை இதுவரை . 

உண்மையான சுதந்திரம் என்னவென்று இதில் கண்டு கொள்ளலாம் .


மனித மனத்தின் அதிகபட்ச துணிவையும் ஆற்றலையும் தன்னம்பிக்கையும் இந்தக் கதையில் உணரலாம் .

 இந்த புத்தகத்தில் உணர்ந்த உணர்வுகளை எட்டாயிரம் பக்கம் எழுதினாலும் பத்தாது .


இந்தப் புத்தகம் ஒரு உண்மை கதை (பயோபிக் ) என்பதை என்னால் நம்ப முடியவில்லை இருந்தும் கற்பனையாக இப்படி ஒரு கதையை எழுத முடியாது என்று நம்புகிறேன் .


இந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்த இயக்குனர் ராம் அவர்களுக்கு மிக்க நன்றி .

அழகிய தமிழில் தெளிவாக மொழிபெயர்த்த ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு தமிழ் சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது .


("Pirates of the Caribbean " , "The Shawshank Redemption" (1994) , "Unbroken " , " escape from pretoria " )  போன்ற படங்களுக்கு இப்புத்தகம் முன்னோடியாக இருந்திருக்கும் .


தனிமையின் பித்து நிலையில் இருப்பவர்களுக்கும் , வாழ்வின் மீது வெறுப்பு கொண்டவர்களுக்கும் , இப்புத்தகம் மிகச் சிறந்த மருந்தாக இருக்கும் .


புத்தகம் வெளியாகி 53 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பேசப்பட்டு கொண்டும் எழுத பட்டுக் கொண்டும் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது .

முடிந்தால் வாசித்துப்பாருங்கள் பட்டாம்பூச்சியை வாழலாம் சிறப்பாக .




 




Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்