நான்தான் ஒளரங்கசீப் - நாவல் வாசிப்பு அனுபவம்

 நான்தான் ஒளரங்கசீப் - நாவல் வாசிப்பு அனுபவம் 


அல்லாஹு அக்பர்.

 அன் லா இலாஹ

இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன

முஹம்மதன் ரஸூலுல்லாஹ்.

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.

மாஷா அல்லாஹுகான

வமா லம் யஷஃலம் யகுன்.




                                          சாரு நிவேதிதா எழுதிய அழகிய புத்தகம் , இவரை அறியாத வாசகர்கள் இருக்க முடியாது ஆனால் அனைவராலும் இவரின் எழுத்தை உள்வாங்கிக்கொள்ள இயலாது , தொடர்ந்து படித்தால் வாய்ப்பு உள்ளது . 

                                             ஹிந்தி யை மற்றுமே பேச தெரிந்த  கங்காராம் என்ற அகோரியின் உடலில் இருந்து பார்சி  மற்றும்  அரபி ,மொழியில் ஒளரங்கசீப் தன் வரலாற்றை எழுத்தாளரிடம்  கூறுவதாக  அமைந்துள்ளது நாவல் ,கதையில் வரும் சில மனிதர்களும் பல சம்பவங்களை கூறுவது கதையை முன்நகர்த்துகிறது.

                                                


                                             தேகம் ,ஸிரோ டிகிரி ,படித்ததால்  சாரு மீது ஒரு இனம் புரியாத பற்று எனக்கு உண்டு , அவரின் அனைத்து நேர்காணல்களையும் கண்டுள்ளேன் முன்பே , புத்தகமாக வாங்கி படிக்க ஆசைப்பட்டேன் , bynge app - ல் வாசிக்க ஆரம்பித்து அதிலேயே முடிவும் பெற்றுவிட்டது .


                                             பத்தாயிரம் பக்கம் எழுத வேண்டிய நாவலை சில ஆயிரம் பக்கங்களியே எழுதியுள்ளார் சாரு,இந்நாவல் எழுதுவதற்க்காக  எவ்வளவு புத்தகங்கள் வாசித்திருப்பார் , எவ்வளவு ஆராய்ச்சில் ஈடு பட்டு இருப்பார் என வாசித்துப் பார்த்தால் புரியும் .

                                           சாரு - வின் எழுத்து மனித மனங்களின் அந்தரங்கமான அழுக்குகளை காவியமாக மாற்றும் தன்மை கொண்டது .




                                            வரலாற்றின் பக்கங்களில் நாம் அறியாத மறைக்கப்பட்ட பல மனிதர்களும் சம்பவங்களும் நிறைந்துள்ளது , இதுவரை நாம் கொண்டிருக்கும் பல சட்டங்களை உடைப்பது சாரு - வின் எழுத்து ,அதை போல ஒளரங்கசீப்                        பற்றி நாம் அறியாத பல ஆச்சரிய தகவல்களை நமக்கு தருகிறது இந்நாவல் , மொகலாய சாம்ப்ராஜ்யத்திலேயே மது அருந்தாத அரசர் , மார்க்கத்தின் படி நான்கு மனைவிகள் மட்டுமே வைத்திருந்தவர் , அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கியவர் , உலக சரித்திரத்திலேயே 60 ஆண்டுகள் மாபெரும் நிலப்பரப்பை ஆண்ட பேரரசர் , மார்க்கத்தின் மீது மிகுந்த பற்று , 82 வயது வரை போர்க்களத்தில் போராடியவர் ,இன்னும் பல தகவல்களை நமக்கு கிடைக்கிறது .


                     எவ்வளவு புகழ்ந்து நல்லவிதமாக கூறி இருக்கிறாரோ அதே அளவுக்கு நேர்மறையானதையும் எழுதியுள்ளார் சாரு . 

போரில் வெற்றி கொண்ட வீரர்கள் நிலை மறந்து இடித்த இந்து கோவில்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது ,

 பிஞ்சு குழந்தைகளின் உடல்கள் சுவற்றில் வீசி எறியப்பட்டு ,...... 

எத்தனை பெண்களை  வயது வித்தியாசம் இல்லாமல் ,....... 

போரில் மாட்டிக்கொண்ட பிணைக்கைதிகள் மதம் மாற்றப்பட்டனர் ,


                   அப்போதைய டெல்லியில் இரத்த செகதி இல்லாத தெருக்களே இல்லை , கவுச்சி வாடை இல்லாத காற்றே இல்லை , பிணங்களை அப்புறப்படுத்த இயலாமல் , பாதி எரிந்து பாதி விலங்குகளுக்கு உணவாகி , அழுகி நாற்றம் அடித்து நோய் பரவி மாண்டவர்கள் பலர் . இன்னும் பல தகவல்களை மிக நுட்பமாக நமக்கு தருகிறார்  சாரு .


                    ஜோஹர் என்பது போரில் எதிரியின் கையில் அகப்படுவதை விட உயிரை விடுவது மேல் என பெரும் தீயில் பெண்கள் குதித்து  சாவது . 

          

                  


                                                  ஒளரங்கசீப் காலத்தில் ஒரு போரில் 3000 பெண்கள் ஜோஹர் செய்தனர் ,யோசித்து பாருங்கள்   3000 பெண்கள் ஜோஹர்  செய்வதானால் எவ்வளவு பெரிய  கிடங்காக இருந்திருக்கும் எவ்வளவு நெருப்பு எவ்வளவு மர கட்டைகள் , பயந்து ஓடிய பல பெண்களை இழுத்து உள் இழுத்து போட ஆட்கள் தனியாக , நெருப்புக்கு பயந்து கழுத்தை குருவாலால் அறுத்து குதித்தவர்கள் பலர் , அதில் தப்பித்த இரு பெண்கள் பின் நாளில் எழுதிய குறிப்புகளின் படி இந்த சம்பவங்களை நமக்கு கடத்துகிறார் ஆசிரியர் , 


                                           இப்படி பல பேரின் கொடூர மரணங்களுக்கு அறிந்தும் அறியாமலும் காரணமானவர் ஒளரங்கசீப் , இத்தனை பேரின் நினைவுகளையும் பாவங்களையும் துடைப்பதற்க்காக ஒரு  சூஃபி யின் அறிவுரை படி, காலம் முழுக்க குரானை பிரதி எடுத்து , தொப்பி தைத்து விற்றும் உணவு உண்டவர் ,   ஒளரங்கசீப் தூங்கும் நேரமே 3 மணி நேரம் அப்போதும் இந்த நினைவுகளும் , ஜோகர் பெண்களின் கதறல்களும் செவிகளில் கேட்டு கொண்டே இருந்தால் மது அருந்தாத பேரரசரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ?.



                                                  இராமாயணம் , மஹாபாரதம் , ஒநாய்க்குலச்சின்னம் , Roots , காவல் கோட்டம் , நபிகள் , வந்தார்கள் வென்றார்கள் , இன்னும் பல நூட்களில் உள்ள தகவல்களும் இதில் உள்ளது , நான் முன்னமே அவற்றை வாசித்து இருந்ததால் இவற்றில் உள்ள பல முரண்கள் என்னை திகைப்படைய செய்தது .

                                                    


                                                   பாபர் , ஹூமாயூன் ,அக்பர் , ஜஹாங்கீர் ,ஷாஜகான்  , ஒளரங்கசீப்  ,மும்தாஜ் ,ஜஹாராபேகம் ,பனாரஸ் ,இன்னும் பலரின் வாழ்வும் பல இடங்களின் கதையும் , சூஃபி  ஞானிகளின் செயல்களும் , என மொகலாய வரலாற்றை நமக்கு வேறு ஒரு கோனத்தில் சொல்லுகிறார் ஆசிரியர் .

இடையில் வரும் ஒரு எழுத்தாளரின் கதையும் மருத்துவரின் கதையும் நம்மை திகைப்படைய செய்கிறது .

இந்தியாவே ஆங்கிலேயர்களின் பிடியில் வசப்பட , " கொண்ட்வானா" என்ற ஒரு பகுதி மட்டும் சுதந்திரம் அடையும் வரை சுதந்திரமாக இருந்ததாம் .

                                                    ஷாஜஹானின் 7 மனைவிகளில் நான்காம் மனைவியானா  மும்தாஜ் உடனான காதல் கதையும் , ஏன் ஒளரங்கசீப் தன் தந்தையை சிறை வைத்தான் என்பதையும்  கூறி  உங்கள் காதல் சின்னத்தை கலங்க படுத்த விரும்பவில்லை , விருப்பம் இருந்தால் இந்நாவலை  வாசித்து பாருங்கள் .


            இந்நாவலை இவ்வளவு உயிரோட்டமாக நமக்கு அளித்த சாரு - விற்க்கு மிக்க நன்றி , 

                                                     எழுத்தாளர் பால குமாரன் ஒரு வாக்கியத்தை பலமுறை கூறியிருக்கிறார் சித்தர் பாடல் என "செத்தாரைப் போல திரி ஒரு பொல்லாப்பும் இல்லை " . இதை போலவே ஸல் {நபிகள்} அவர்கள்  கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது .


 " நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் தோழரான அப்துல்லாஹ் இப்னு உமரிடம் "உலகில் நீ ஒரு அந்நியனைப் போல் இரு; அல்லது, ஒரு வழிப் போக்கனைப் போல் இரு அல்லது, கல்லறையில் உறங்கும் ஒரு மனிதனைப் போல் இரு" என்று கூறினார்கள். "

ஒரே இடத்திற்கு பல பாதைகள் இருப்பது சாத்தியம்தானே ?

                                                   ஒரு  சம்பவத்தை சிந்தித்து பாருங்கள் போர்க்களத்தில் யானையில் இருந்து இறங்கி தொழுகை செய்யும் பேரரசனின் இறை பக்தியை உணர முடிகிறதா ? 


இஸ்லாமிய மார்க்கத்தின் மீது ஒளரங்கசீப்  வைத்துள்ள அளப்பரிய அன்பை  நாவல் முழுக்க உணர முடிகிறது.

இதில் வரும் சில சூஃபி ஞானிகளின் கதை நம்மை  தியானத்தில் இருப்பது போல ஆழ்ந்த அமைதிக்கு இழுத்து செல்கிறது ,



இதற்க்கு முன்பு நபிகள் { ஸல் } பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்து இருந்தேன், அதன் தொடர்ச்சியாக இந்நாவல்.இதை வாசித்த 46 நாட்களும் ஒரு வித பேரன்பை உணர்ந்தேன் .

 இளம் வயதிலேயே திருக்குரானை மனனம் செய்து ஒரு பக்கீராக வாழ விரும்பியவரை பேரரசாக மாற்றியது விதியின் கட்டாயம் .

                                  ஒளரங்கசீப் ஐ தெரிந்து கொள்வதால் , குறிப்பாக அவனின் மன நிலையை உணர்வதன் மூலம் கிடைக்கும் அனுபவம் வார்த்தைகளில் சொல்லி விட முடியாதது , வாசித்து அனுபவியுங்கள் .


                                               

    -நந்தகுமார்


லாயிலாஹயில்லல்லா

முகம்மதுரசூல்லல்லா

சல்லல்லாஹூலலைவசல்லம்

யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்






சில நண்பர்கள் , பொதுவாகவும் என்னை பற்றியும் பல கேள்விகள் கேட்டுள்ளனர் அதற்கான பதிலை அடுத்தடுத்து வெளியிடுகிறேன் , உங்களுக்கும் கேள்விகள் இருந்தால் அனுப்பலாம்

 ➡️ nanthakumar6497@gmail.com


                                                                     

Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025