கேள்வி - பதில்கள்

 

                   




15 கேள்விகளில் 5 -ற்கு  விடை அனுப்பியுள்ளேன் , கடிதம் அனுப்பிய 15 பேருக்கும் மிக்க நன்றி .



  கடவுள் நம்பிக்கை உள்ளதா நந்தா ?

                                                      

                                              பொதுவாக கட+ உள் = கடவுள் , தன்னை கடத்தலே கடவுள் என்பது ஒரு விதி , 'அஹம்ப்ரமாம்ஸி ' நானே கடவுள் என்பதும் ஒரு விதி  , இந்த உலகில் பல கோடி கடவுள்கள் உள்ளன ,அதிலும் தமிழர்களுக்கு அனைத்துமே இறையம்சம் கொண்டவை, குலதெய்வ வழிபாடு  இயற்க்கையை வணங்குதல்  மற்றும்  புனிதமாக தோன்றும் அனைத்துமே தமிழர்களுக்கு வணங்கத்தக்கது , பெற்ற அன்னை , பூர்விக நிலம் , ஐம்பூதங்கள் , காளை , இளம் வயதில் மரணித்தவர்கள் ,செய்யும் தொழில் , ஆயுதங்கள் , தந்தை , ஆசான் ,இன்னும் பல ,.


                                               முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்டவர் என எவரும் இருக்க வாய்ப்பு இல்லை அதே போல் கடவுள் மறுப்பாளர் என எவரும் இருக்க வாய்ப்பு இல்லை  , சொந்த வாழ்க்கையில்  சில தருணங்களில் சில சம்பவங்களில்                             உணரலாம் , அதை மற்றவரிடம் கூறும் பொது சாதாரணமாக தோன்றும். விண்வெளி அறிவியல்  மற்றும் புவியின் தோற்றம் ,பற்றி அதிகம்  அறிந்தவர்கள் கடவுளை நம்புவது மிக கடினம் ,. சில சமயங்களில் அதிகம் அறிவதே பிழை என தோன்றுகிறது ,. 

                              கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் 10 பாகமும் , பல அறிய சம்பவங்களும், சொந்த அனுபவங்களும் பகிர்ந்திருப்பார் . புத்தகத்திற்கு பெயர்தான் தவறாக வைத்து விட்டார் { இதை அவரே எழுதியும் இருக்கிறார் } அனைத்து மதங்களின் உச்ச சம்பவங்களும் அதில் இடம் பெற்றிருக்கும் , ஒரு சம்பவத்தை மற்றும் பகிர்கிறேன் , கடந்தஜென்மம் நினைவு வந்து 4 வயது சிறுவன்அரபி மொழியில் அவன் கதையை கூறியதாக எழுதியுள்ளார் { அதற்க்கு முன் அவன் அறிந்தது குஜராத்தி மொழி மட்டுமே }  . 


                             கடவுள் மீது எந்த தருணத்திலும் நீங்காத பற்று கொண்டவர்களை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது .     

                                                                          கடவுளை பல தருணங்களில் பலர் பல விதமாக உணர்கின்றனர் ,  இராணுவ வீரன் போர் முடிந்த பின்பு தான் உயிரோடு இருக்கும் பொது ,  விவசாயீ அறுவடை செய்யும் போது பயிர் வளர்ந்து வரும் போது , வாகன  ஓட்டுநர் நிறைவாக பயணத்தை முடித்த பின்பு , கலைஞனின் செயலுக்கு கிடைக்கும் பாராட்டில் , கைத்தட்டலில் , ஒரு படைப்பு படைப்பவனை அறியாமல் முழுமை அடையும் போது,  இப்படி ஒவ்வொருவரும் உணர்கின்றனர் . கண்டுகொள்ளாமல் செல்பவரும் உண்டு ,.    

"மடலாய் விடலாய் கடலாய் திடலாய் உடலாய் உயிராய் உலகங்கள் ஆகியது " ,  பரஞ்ஜோதி மகான் கூறிய இவ்வாசகத்தில்  இறைமயம் இல்லையே ,. ஆனால் அனைத்தையும் மீறிய ஏதோ ஒன்று செயல் புரிவதாக உணர முடிகிறது .   

              இந்த கேள்விக்கு நிறைய எழுதலாம்               இப்போதைக்கு இது போதும் ,.... ,  





  2022-ல் மொத்தம் எத்தனை புத்தகம் வாசித்து முடித்தாய் ?

2022-ல் மொத்தம் 34 புத்தகங்கள் நண்பா ,  

தேகம் - சாரு , 

ஆதலினால் - எஸ்.இராமகிருஷ்ணன் ,

ஞானமாலிகா - கண்ணதாசன் ,

துளசிமாடம் - நா.பார்த்தசாரதி ,

எனது இந்தியா -  எஸ்.இராமகிருஷ்ணன்,   

கூகை -சோ.தர்மன் ,

தூர்வை - சோ.தர்மன் ,

வேர்கள் - சின்னத்தம்பி முருகேசன் ,

குமரித்துறைவி - ஜெயமோகன் ,

தொலையுணர்வு - ஜோசப் மர்ஃபி,

என் பெயர் படேல் -  சின்னத்தம்பி முருகேசன் ,

எல்லா நாளும் கார்த்திகை - பவா . செல்லத்துரை ,

அயன் இமயம் தோட்ட சினிமா - மிதுன் பிரகாஷ் ,

அம்பறாத்தூணி - கபிலன் வைரமுத்து ,

தெய்வம் என்பதோர் - தொ.பரமசிவம் ,

செம்மீன் - தகழி சிவசங்கரப்பிள்ளை ,

பட்டாம்பூச்சி - ரா.கி.ரங்கராஜன் ,

எழுதுக - ஜெயமோகன் ,

ஜாதகக்கதைகள் { பௌத்த கதைகள் }

சிப்பியின் வயிற்றில் முத்து - க.கிருஷ்ணமூர்த்தி ,

மனிதனுக்கு அடுத்தவன் - கபிலன் வைரமுத்து ,

பொய்த்தேவு - க . நா .சுப்ரமணியன் 

மூதாய் மரம் -  வறீதையா கான்ஸ்தந்தின் , 

மருதநாயகம் - அமுதன் ,

பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன் ,

அசுரன் - ஆனந்த்நீலகண்டன் ,

காடோடி - நக்கீரன் ,

மைத்ரி - அஜிதன் ,

நபிகள் - கி.ஆ.பெ .விசுவநாதம் ,

எண்ணி முடித்த நட்சத்திரம் -

harrypotter - j.k. rowling

பஷீர் நாவல்கள் முழுத்தொகுப்பு ,

நான்தான் ஒளரங்கசீப் - சாரு நிவேதிதா ,

அ-காலம் - சாரு நிவேதிதா ,


இவை  புத்தகங்களாகவும்  Pdf வடிவிலும் படித்தவை ,


இவற்றில் குறிப்பிட மறந்த புத்தகங்கள் இருக்கலாம் . {வேண்டும் என்றே}


 -படித்து கொண்டு இருப்பவை

வானம் வசப்படும் - பிரபஞ்சன் 

மழைப்பாடல்{ வெண்முரசு இரண்டாம் புத்தகம் }  - ஜெயமோகன்,

-டிசம்பர்-க்குள் படிக்க இருக்கும் புத்தகம் 

 - உருமாற்றம் - பிரான்சிஸ் கா ஃப்கா  






அன்றாட உலகில் சுழல்பவர்களை சாதாரண மனிதர்களை  பற்றி உந்தன் எண்ணம் என்ன நந்தகுமார் ?


    அடிப்படைத்  தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே வாழ்வின் அதிக பட்ச நேரங்கள் செலவு ஆகின்றன , ஒவ்வொரு வயதிலும் அதற்க்கு ஏற்ப கடமைகள் இருக்கும் , இதற்க்கு நடுவில் அறச்செயல்பாடு பற்றி சிந்திப்பவர்களே மிக குறைவு ,

 மனித இனம் இரண்டு  வகையில் அடிமையாக இருக்கும்.


 ஒன்று -காமம் அல்லது காதல் , இருபாலினத்தவருக்கும் எதிர் பாலினத்தவர் மீதோ அல்லது வேறு மாதிரியோ இருக்கலாம்  இது மிருகங்களுக்கும் பொருந்தும் . இதற்காக மட்டுமே வாழ்வை வீணடிப்பவர்கள் .


 இரண்டு - போதை க்கு அடிமையாவது , அனைத்து விதமான ஆசை , பொன் , பொருள் ,நிலம் , உணவு , உடமைகள் , பணம் ,புவியில் உள்ள அணைத்து வளங்களின் மீதும் , ஏதோ ஒன்றுக்கு ஏங்குபவர்களாக , இன்னும் பல . மொத்த வாழ்க்கையையும் இதிலேயே அற்பணிப்பவர்கள் 90% பேர்.


இந்த இரண்டயும் தாண்டி சிந்திப்பவர்களே,கலைகள்  ,ஆன்மிகம் , அறச்செயல்கள்  புரிய , என வேறு வழி க்கு வருபவர்கள்  , 

வரலாற்றின் பக்கங்களில் நீங்கள் முக்கியமாக நினைக்கும் பல ஆளுமைகள் இந்த மூன்றாம் வகையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் . வெளியில் தெரியாமல் பிரபலம் அடையாமல் மறைந்து போன பல சாதனையாளர்களும் , மறைந்து இருப்பவர்களும்  உள்ளனர் , இருந்தும் அவர்களின் படைப்புகள் பல கோடி சூரியன்களாய்  பிரகாசம் அளிக்கும் .மனித இனம் உள்ளவரை அதை உபயோகிப்பவர்களுக்கு  மட்டும் .

 மனிதர்கள் பல விதம் நண்பா , அன்றாடத்தில் சுழல்பவர்களும் புனித ஆத்மாக்களே , அதை அனைவரும் உணர்வது இல்லை .



நீ  இது வரை எத்தனை தொழில் பார்த்துள்ளாய் நண்பா ? 


                            - 6 வீட்டிற்க்கு முழுமையாக சித்தாள் வேலை பார்த்துள்ளேன் சிறுவயது முதல் ,

                          - ஒன்பதாம் வகுப்பில் விவசாய வேலை , அந்த வருடம் 90 மூடை நெல் வந்தது ,

                            - கோயம்புத்தூரிலும்  உள்லூரிலும் பஞ்சாலையில்  supervisor ஆக பணியாற்றி இருக்கிறேன் ,

                            -  3 வீடுகளுக்கு வயரிங் & ப்ளம்பிங் , முழுமையாக பார்த்துள்ளேன் ,

                            -  கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் { pumphouse four } சில காலம் , 

                            -  சிறு வயது முதல் கடைவியாபாரம் , இன்னும் பல ,..   



உன்னை கவர்ந்த பாடல் இந்த வருடத்தில் ?


                              இசை எனக்கு இன்றியமையாத ஒன்று , அது தரும் உணர்வுகள் விளக்க முடியாதவை .


    இந்த வருடம் எண்ணற்ற பாடல்கள் இருக்கலாம் , தற்போதைக்கு என் மனதில் உள்ள பாடல்களை மட்டும் கூறுகிறேன்.


                    ஒவ்வொரு பாடலும் பல நினைவுகளை பல உணர்வுகளை தூண்டும் ,   குளுகுளு என்ற படத்தில் வரும் " இன்பங்கள் ஆயிரம் " பாடல் ,  என் கல்லூரி நாட்களை என் நண்பர்களை , என் மனதை ஆழ தூர்வாரியது , அன்று பட்டமளிப்பு விழாவிற்கு சென்று கனத்த மனதோடு கல்லூரியை விட்டு நீங்கி வந்தேன் , அந்த மன நிலையில் இந்த பாடல் எனக்குள்  ஏற்படுத்திய தாக்கம்  வார்த்தைகளில் அடங்காதவை ,. 



             அதே படத்தில் இன்னொரு பாடலின் வரி ,

“ Inner peace தான்  Important bro 

அசலா வாழ்றது Blessings  தானே bro

முக்ய தேவ என்னானு

நீ ஞாபகம் வச்சிக்கோ

செய்ற வேலயில happy இல்லனா

Soul  கோச்சிக்கும் “ 

சாதாரண வாக்கியத்தில் அசாதாரண தத்துவங்கள் ( இந்த வரிகளின் சரியான அர்த்தம் புரிந்தால் போதும் )


                   ஒவ்வொரு நாவலை முடிக்கும் போதும் இறுதி அத்தியாயத்தில் சில பாடல்களை கேட்பது என் வழக்கம் , அதில் ஒன்று இராவணன் படத்தில் வரும் " நான் வருவேன் " பாடல் , இந்த பாடலை 'வேர்கள் ' மற்றும் 'என் பெயர் படேல் ' நாவல் இறுதி பக்கங்கள் வாசிக்கையில் கேட்டேன் . 

இந்த இரு நாவல்கள் குறிப்பாக வேர்கள் முடிக்கையில் அந்த இசையோடு , என் மனம் கொண்டிருந்த வெட்கையில் சூடான கண்ணீர் வழிந்து கன்னம் சிவந்தது . அந்த உளஉணர்வை எழுத முடியவில்லை .


"நான் தான் ஒளரங்கசீப்" நாவல் முடிக்கையில் ஜோதாஅக்பர் படத்தில் வரும் ' க்வாஜாஜி '  பாடல் கேட்டேன்  .


இந்த வாரம் முழுக்க பீதோவனின் அனைத்து சிம்பொனி இசையையும் கேட்டு வியக்கிறேன் .


                 


                   

          

  உங்களுக்கும் என்னிடம் கேட்க கேள்விகள் இருந்தால் nanthakumar6497@gmail.com




                                                    

Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்