பிரபஞ்சன் | வானம் வசப்படும்

 பிரபஞ்சன் 





இவரை பற்றி சிந்திக்கும் போதெல்லாம் என் நினைவில் வருபவை இவரின் சில வரிகள் . " வேலையும் சம்பளமும் மனித இனத்திற்கு எதிரானது " இந்த வரியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளது . உலகின் மிக சிறிய கதை என ஏதேதோ கதை கூறுகிறார்கள் ஆனால் என் பாட்டி எனக்கு சொன்ன அந்த ஒரு வரி கதை தான் மிகச்சிறிய கதை அது " ஒரு ஊர்ல ஒரு நரி கதை அதோட சரி " இந்த கதையிலும் தந்திரம் நிறைந்துள்ளது . 


இன்னும் சில சம்பவங்கள் , ஒரு வழிப்போக்கன் இரவு 1.30 மணிக்கு  வீட்டுக் கதவை தட்டி, என்ன வேணும் தம்பி ஏன் இந்த நேரத்துல கதவை தட்டுறீங்க ? , இல்ல சார் நைட்டு 1.30 க்கு ஒரு எழுத்தாளர் என்ன செய்வாரு னு பாத்துட்டு போலாம் னு வந்தேன் என்ன செய்றீங்க சார் ? , இந்த அளவிற்கு இவர் மீது பித்துக் கொண்ட வாசகர்கள் அப்போது இருந்துள்ளனர் .



இரு வேளை உணவிற்கு உத்திரவாதம் இருந்திருந்தால் இன்னும் சில நல்ல படைப்புகளை படைத்திருப்பேன் ,நான் ஒன்றும் புதுமை பித்தன் அளவுக்கு வறுமையில் இல்லை , எனக்கடுத்து வரும் தலைமுறை என்னை விட நல்லா இருக்கணும் என அவர் கூறும்  போது மனம் கலங்குகிறது .


 பெரிய செல்வம் செழித்த வீட்டில் வளர்ந்தவர் , இளமையில் முறைப்படி தமிழ் கற்றவர் , சங்கஇலக்கியங்கள் மற்றும் அவர் காலத்திய படைப்புகளையும் படித்தவர் . 


ஐந்து லட்சம் ரூபாய் இருந்தாலும் இரண்டே நாளில் செலவழிக்க கூடியவர் , தன்னை சுற்றி எத்தனை நண்பர்கள் இருந்தாலும் அனைவருக்கும் அவரே பணம் செலவழிப்பார் , பயண டிக்கெட்டுகள் உணவகம் மற்றும் தங்கும் இட கட்டணங்கள் அனைத்தும்.


 எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால் தமிழ் ஆசிரியர் பணியையும் துறந்தவர் .பல திரைப்பட கலைஞர்களுக்கு நண்பராக இருந்தவர் . இவரது இறுதிக்கால மருத்துவ செலவுகளை இயக்குனர் மிஸ்கின் ஏற்று கொண்டார் .


ஒரு மேடையில் தொலைபேசி அழைத்த போது ," சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியம் இது " என்றார் அரங்கம் அதிர்ந்தது சிரிப்பலையில் .


இலக்கியத்தை பற்றி பல பேரோட கருத்து " எழுதி ஒன்னும் கிழிக்க முடியாதுங்கிறது தான் " சரி கிழிச்சுதான் பாப்போமே " இது தான் பிரபஞ்சன்.


கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலம் ஃபிரான்ஸ், ஹாலந்து, இங்கிலாந்து என மாறி மாறி மூன்று வெள்ளை வெளிநாட்டவர்களின் குடியேற்ற நிலப்பகுதியாக இருந்து, இறுதியில் 140 ஆண்டுகாலம் ஃபிரான்ஸ் நாட்டின் பகுதியாகவே இருந்த பாண்டிச்சேரியில் 1945 ஏப்ரல் 26ஆம் தேதி பிறந்தவர் பிரபஞ்சன். இயர்பெயர் சாரங்கபாணி வீரபத்திரன் வைத்திலிங்கம்.


1954ல் பாண்டிச்சேரி இந்தியாவின் பகுதியாக மாறுகிறது. அப்போதுமே அது இந்தியாவை விட ஃபிரான்ஸாகத்தான் இருந்தது. 1963இல் பாண்டிச்சேரி மக்களுக்கு ஃபிரான்ஸ் நாடு ஓர் அறிக்கை விட்டது. அவர்கள் ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்கள் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு ஃபிரான்ஸ் நாட்டிற்குக் குடியேறலாம். அல்லது ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்கள் எனும் அந்தஸ்துடன் பாண்டிச்சேரியிலேயே வாழலாம். நுழைவனுமதிச் சீட்டு இல்லாமலேயே எந்தநேரமும் ஃபிரான்ஸ் செல்லலாம். ஃபிராங்கோ–பாண்டிச்சேரியர்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் அந்த அந்தஸ்தை அடைவதற்குச் சிலபல சட்டதிட்டங்கள் முன்வைக்கப்பட்டன.


அதில் ஒன்று தமது பெயரின் எழுத்துகளை ஃபிரெஞ்சு மொழிக்கு இணங்குவதுபோல் மாற்றவேண்டும் என்பது. அதாவது கிருஷ்ணமூர்த்தி Kichenamourty ஆகவேண்டும். குமார் Coumer ஆகவும் வீரபத்திரன் Virapattirane ஆகவும் மாறவேண்டும். இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்வதாக அவர்கள் எழுதித்தரவேண்டும். ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்களாக மாற ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்தது பிரபஞ்சனின் குடும்பம். பிரபஞ்சனின் இயற்பெயரின் ஆங்கில எழுத்துகள் Sarangabany Dit Virapattirane Vaithilingam. பிற்காலத்தில் அவரது இரண்டு மகன்கள் ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்குவதற்கான சூழல் உருவானது பிரபஞ்சனுக்குப் பரம்பரையாகக் கிடைத்த இந்த ஃபிரான்ஸ் நாட்டுக் குடியுரிமையினால்தான்.



' பிரபஞ்சன் ' இந்த பெயர் மீது எனக்கு மிகுந்த ஈடு பாடு உண்டு .


 மகாத்மா காந்தியிடம் ஒரு முறை நீங்கள் யார் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் நான் உலகால் உலகன் , இனத்தால் மனிதன் , நாட்டால் இந்தியன் , அதன் பின்தான் நான் ' மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 'என்றார் .

இவர் அதையும் தாண்டி 'பிரபஞ்சன் ' என தன் பெயரை வைத்திருப்பது சிறப்பு . 

இவரது பெயரை எனது இளைய மருமகனுக்கு வைக்க பரிந்துரை செய்துள்ளேன் .


பார்ப்பதற்கு நெருங்கி பழகியவர் போல தோன்றும் இவருடைய பேச்சுக்களை கேட்டுள்ளேன் அதிகமாக , இவர் எழுதிய ஒரு புத்தகமாவது வாசிக்க வேண்டும் என பல முறை எண்ணினேன் .அதுவும் நிகழ்ந்தது -



வானம் வசப்படும் 





         சாகித்ய அகாதெமி விருது வாங்கிய புத்தகம் , புதுச்சேரியின் வரலாறு என்றே சொல்லலாம் இதை (1742 -1754 ) , இக்கதையில் வரும் பல கதை மார்ந்தர்கள் உண்மையானவர்கள் வாசிக்க சுவாரசியமானது , அக்கால கட்டத்தை சேர்ந்த பல விதமான மனிதர்களின் குணங்களையும் செயல்களையும் இதில் அறியலாம் .

 அப்போதைய புதுச்சேரி தலைமை அதிகாரி ஆனந்தரங்கப்பிள்ளை என்ற செல்வந்தரின் நாட்குறிப்பில் இருந்து புனையப்பட்டது இந்நாவல் , இது எனக்கு வியப்பானது , ஒருவரின் அன்றாட நாட்குறிப்பு எதிர்காலத்தவர்க்கு பொக்கிஷம் என்பதற்கு இது ஒரு சாட்சி . ( நானும் 2014 முதல் இன்று வரை தினசரி நாட்குறிப்பு எழுதி வருகிறேன் , பார்க்கலாம் இதுவும் வருங்காலத்தில் காவியம் ஆகலாம் }     

.

500 பக்கம் கொண்ட இந்நாவலை 20.10.2022 - ல் வாசிக்க ஆரம்பித்து 07.12.2022 ல் முடித்தேன் , ஏன் இவ்வளவு காலதாமதம் என்றால் இதற்கிடையில் அகாலம் , மழைப்பாடல் என்ற 2 நாவலை வாசித்து கொண்டிருந்தேன் அதை நிறைவு செய்த பின் இதற்க்கு வந்ததால் தாமதம் , இன்னொரு காரணம் இந்நாவலை சார்ந்த சில நாவல்களை நான் முதலாகவே வாசித்து இருந்ததால் இதன் மீது ஏற்பட்ட சலிப்பு .


கதையில் ' தேவை இருக்கிறவங்களுக்கு மட்டும் கடவுள் இருக்கார் மத்தவங்களுக்கு இல்லை ' என்ற சுருக்கமான வரி சற்று யோசிக்க வைத்தது .


கதையை பற்றி அதிகமாக சொல்ல போவது இல்லை , இந்நாவலை படித்தால் அப்போதைய பல வித்தியாசமான வழக்குகளையும் அதற்க்கு அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் , சுவாரசியமானது அவை .

                                      - நந்தா


  ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஷ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தத்தர்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்யமாக எனக்கு இருந்தது. நடந்ததைத் திருப்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள் அவர்களின் மொழி எனக்கு கை வந்திருக்கிறது ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாகிறது. -பிரபஞ்சன்


Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்